Monday, October 31, 2011

செய்திகள்

அன்பார்ந்த நண்பர்களுக்கு ,பூமிதானம் என்ற பெயரில் நான் கொடுத்திருந்த வேண்டுகோளில் சில நண்பர்கள் கொஞ்சம் நன்கொடைகள் அனுப்பியிருந்தனர் அவர்களுக்கு என் நன்றியையும் ஸ்ரீ வேதமூர்த்தியிடம் அவர்களுக்கு சமஸ்த மங்களங்கள் அடைய பிரார்த்தனைகளும் சமர்பிக்கிறேன் .ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் க்ருபையினால் ரூபாய் இருபது லட்சத்தில் லக்ணோ நகரத்தின் பக்ஷி கா தலாப் என்ற இடத்தில் முக்கால் ஏக்கர் அதாவது சுமார் இருபத்தியேழாயிரம் சதுர அடி பூமி லக்ணோ பாடசாலை பெயரில் வாங்கப்பட்டு ரிஜிஸ்தர் செய்யபட்டுள்ளது .அவ்விடத்தில் தற்பொழுது கட்டிடம் கட்டுவதற்கு தயார் நிலையில் உள்ளது .தற்பொழுது லக்ணோ வேத பாடசாலையில் இருத்தைந்து வேத வித்தியார்த்திகள் வேத அத்தியணம் செய்து வருகிறார்கள் . லக்ணோ வேத பாடசாலை வாடகை கட்டிடத்தில் மாதம் சுமார் ஐயாயிரம் ரூபாய் செலவழிக்கப்பட்டு நடக்கிறது .சுய கட்டிடம் கட்டப்பட்டால் அந்த பணம் இன்னும் வேத வித்தியார்த்திகள் அத்தியணம் செய்ய உபயோகமாக இருக்கும் .தவிர இப்பொழுது உள்ள காலத்தில் இருபத்தைந்து வித்தியார்த்திகள் வேத அத்தியணம் செய்ய ,இருப்பிடம் ,உணவு ,உடை மற்றும் உள்ள செலவுகளுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு சொல்லவே வேண்டாம். மாத செலவுகளுக்கு மட்டும் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் ஏற்றுக்கொண்டு மாதம் ரூபாய் முப்பத்தி எழாயிரம் அனுப்புகிறார்கள் .அதிகமான செலவுகளை சமாளிக்க இங்கு உள்ள நல்மனம் உடையவர்கள் உதவி புரிந்து வருகின்றனர் .அன்பர்களுக்கு உங்களால் முடிந்த நன்கொடைகளை அனுப்பி உதவி செய்ய்மாறு கேட்டுக்கொள்கிறேன் . எஸ் ஜி சுவாமிநாதன் . ஹிமாலய மார்க் ,இந்திரா நகர் லக்னோ .உத்திர பிரதேசம் .இந்தியா .

No comments: